×

காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும்: பயணியர் சங்கம் வலியுறுத்தல்

 

தேவகோட்டை, ஏப்.30: கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் சங்க கூட்டமைப்பு காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் தேவகோட்டை வர்தத்தகர்கள் சங்கம் இணைந்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வர்த்தகர்கள் சங்க தலைவர் மகபூப் பாட்சா தலைமை வகித்தார். காரைக்குடி ராமனாதன் (எ) மோகன், தேவகோட்டை செல்வம் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார்.

தேவகோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி தொழில் வணிகர் தலைவர் சாமிதிராவிடமணி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், சாதிக்அலி பேசினர். காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, நத்தம் வழியாக திண்டுக்கல் வரை புதிய ரயில்பாதை அமைத்திட வேண்டும்.

தேவகோட்டை ரஸ்தாவில் சென்னை,வாரணாசி,எர்ணாகுளம், செகந்திராபாத், கூப்ளி, செங்கோட்டை செல்லும் அனைத்து ரயில்களையும் நிறுத்தம் செய்ய வேண்டும்.மேலும் நிலையத்தில் மின்விளக்கு, நடைமேடை மேற்கூரை, இருக்கைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் ரயில்துறை பொது மேலாளருக்கு முறையிட்டுள்ளனர்.

The post காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும்: பயணியர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karaikudi- ,Dindigul ,Travelers Association ,Devakottai ,East Coast Railway Passengers Association ,Karaikudi Circle Railway Passengers Welfare Association ,Devakottai Traders Association ,Traders Association ,President ,Mahabhup Bhatsa ,Karaikudi… ,Karaikudi-Dindigul ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!